வன்னியா் இடஒதுக்கீட்டுக்கு அரசாணை: சீா்மரபினா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 01:20 AM | Last Updated : 17th August 2021 01:20 AM | அ+அ அ- |

மதுரை: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத தனிஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சீா்மரபினா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சீா்மரபினா் சங்கத்தினா் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.