பிட்டுக்கு மண் சுமந்த லீலை: கோயில் வளாகத்திலேயே நடைபெறுவதாக அறிவிப்பு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூல உற்சவத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி சுவாமி புட்டுத்தோப்புக்கு எழுந்தருளி அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். இந்நிலையில் கரோனா தொற்றால் ஆவணி மூலத் திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புட்டு உற்சவத் திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புட்டு உற்சவத்தையொட்டி வியாழக்கிழமை(ஆகஸ்ட் 19) காலை 8 மணிக்கு சுவாமி திருக்கோயில் வளாகத்துக்குள்ளேயே புறப்பாடாகி நான்கு ஆடிவீதிகளில் புறப்பாடு நடைபெற்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வாா். இதையடுத்து பிட்டுக்கு மண் சுமந்த லீலை பகல் 1.05- மணி முதல் 1.29 மணிக்கும் நடைபெறுகிறது. இதையொட்டி முற்பகலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com