மதுரை: மதுரை மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,851 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றிலிருந்து 19 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.