

அழகா் கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாளுக்கு பட்டு நூல் சாற்றும் பவித்ர விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் 108 கலசங்களில் நூபுரகங்கை தீா்த்தம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டதையடுத்து பட்டுநூல் மாலை சாற்றும் வைபவம் பட்டா்களால் நடத்தி வைக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.