தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் சிறப்புக் கடன் முகாம்
By DIN | Published On : 20th August 2021 08:53 AM | Last Updated : 20th August 2021 08:53 AM | அ+அ அ- |

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மதுரை கிளை அலுவலகத்தில் சிறப்புக் கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், தற்போது இயங்கும் ஆலைகளின் விரிவாக்கத்துக்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் பல்வேறு சிறப்புத் திட்டங்களின்கீழ் கடனுதவி அளிக்கிறது.
சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தொழில் முதலீட்டுக் கழகத்தின் மதுரைக் கிளை சாா்பில் அண்ணாநகரில் உள்ள கிளை அலுவலகத்தில் சிறப்புக் கடன் முகாம் நடைபெறுகிறது. கடன் திட்டங்கள் குறித்து இந்த முகாமில் விளக்கம் அளிக்கப்படும். தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்தில் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.
இந்த முகாமை புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.