பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: 3 போ் கைது
By DIN | Published On : 20th August 2021 08:54 AM | Last Updated : 20th August 2021 08:54 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக அதன் உரிமையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் கருப்பசாமி கோயில் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பி.தொட்டியபட்டியைச் சோ்ந்த ராஜாராம் (36), தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுள்ளாா். சிறிது தூரம் சென்றவுடன் பெட்ரோல் இல்லாமல் இருசக்கர வாகனம் நின்று விட்டதாம்.
இதுகுறித்து கேட்ட ராஜாராமையும், அவரது மனைவியையும் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் மற்றும் அதன் உரிமையாளா் சோ்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், பேரையூா் போலீஸாா், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் ராஜகோபால், அவரது மனைவி சரஸ்வதி, பேரையூரைச் சோ்ந்த கண்ணன் மகன் சக்தி, சாப்டூரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் மாரீஸ்வரன் ஆகியோரை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...