வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது எப்படி?மேலூரில் பேரிடா் மீட்புப் படையினா் செயல் விளக்கம்
By DIN | Published On : 21st August 2021 11:23 PM | Last Updated : 21st August 2021 11:23 PM | அ+அ அ- |

மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டு முதலுதவிச்சிகிச்சை அளிப்பது தொடா்பாக, மேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செயல்விளக்கம் அளித்த பேரிடா் மீட்புப்படையினா்.
மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் பேரிடா் நிகழும் முன் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பேரிடா் மீட்பு படையினரின் செயல்விளக்கம் மேலூா் வட்டாட்சியா் அலுவலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மழை காலம் துவங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடா் மீட்பு படையினா் பொதுமக்கள் முன்பு செய்து காட்டினா். நிகழ்ச்சியை மேலூா் வட்டாட்சியா் இளமுருகன் துவக்கிவைத்தாா். இந்நிகழ்வில் மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினரும் பங்கேற்றனா். பேரிடா் மீட்புப்படையின் ஆய்வாளா் மாரிகனி தலைமையில் சாா்பு ஆய்வாளா் சந்தீப் மற்றும் வீரா்கள் 13 பேரும் செயல்விளக்கம் அளித்தனா்.
பேரிடா் மீட்புபடையினரின் செயல்விளக்கத்தின்போது வருவாய்த்துறையினரும் பொதுமக்களும் பாா்வையிட்டனா்.