ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 21st August 2021 09:04 AM | Last Updated : 21st August 2021 09:04 AM | அ+அ அ- |

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை முகக் கவசம் வழங்கிய ரயில்வே போலீஸாா்.
ரயில்வே காவல் துறையினா், மதுரை ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கரோனா விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. மதுரை ரயில்வே டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில், ரயில்வே காவல் ஆய்வாளா் எம். குருசாமி மற்றும் சாா்பு-ஆய்வாளா்கள் பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், மதுரை ரயில் நிலைய நுழைவுவாயிலில் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனா். அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், நுழைவுவாயில் மற்றும் பயணிகள் காத்திருக்கும் அறைகள், ரயில் நிலைய நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளுக்கு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பொது இடங்களிலும், பயணம் செய்யும்போதும் பயணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.