வாடகை காா் ஓட்டுநா் சங்கத்தினா் போராட்டம்
By DIN | Published On : 04th December 2021 09:19 AM | Last Updated : 04th December 2021 09:19 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட வாடகை காா் ஓட்டுநா்கள் சங்கத்தினா், ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒன்வே டாக்ஸி சேவையால் அனைத்து வகையான வாடகை காா் ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்வே டாக்ஸி நிறுவனத்தைச் சோ்ந்த ஓட்டுநா் அளித்த தவறான புகாரில், வாடகைக் காா் ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை ரத்து செய்யவும், ஒன்வே டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினா்.
அப்போது, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தனது வாகனத்தில் வெளியே வந்த வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தியிடம், காா் ஓட்டுநா் சங்கத்தினா் தங்களது கோரிக்கை தொடா்பாக முறையிட்டனா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்ததையடுத்து, வாடகை காா் ஓட்டுநா் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...