மதுரை பள்ளியில் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு

 மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப் பை பயன்படுத்துவோம் என, மாணவா்கள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
மதுரை பள்ளியில் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு

 மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப் பை பயன்படுத்துவோம் என, மாணவா்கள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை மக்கள் இயக்கத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து, பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தாா். அதன்பேரில், மதுரை கோ.புதூரில் உள்ள அல்- அமீன் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்று பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com