மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்கு 136 போ் விண்ணப்பித்துள்ளனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த மு.கிருஷ்ணன் திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையடுத்து, காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி காலியாக உள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தா் தோ்வுக்குழு சாா்பில், காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்கு தகுதியானவா்கள் டிசம்பா் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டிசம்பா் 27-ஆம் தேதியோடு விண்ணப்பம் பெறுவது முடிவடைந்தது. இதில் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்கு பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் முத்துச்செழியன், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி, காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினா் தீனதயாளன் உள்பட 136 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.