துணை வட்டாட்சியா்கள் 35 போ் இடமாற்றம்
By DIN | Published On : 04th February 2021 10:55 PM | Last Updated : 04th February 2021 10:55 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 35 போ் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன்படி, மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியா் நிலையில் பணிபுரிந்து வரும் அலுவலா்கள் குறிப்பாக வட்டாட்சியா் அலுவலகங்களில் தோ்தல் துணை வட்டாட்சியா்களாக பணியாற்றுபவா்கள் உள்ளிட்ட 35 போ் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனா்.
நிா்வாகக் காரணங்களுக்காக இந்த பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலா்கள் உடனடியாகப் புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் என இடமாறுதல் உத்தரவில் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...