டி.கல்லுப்பட்டி அருகே சூதாடிய 5 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 08:39 AM | Last Updated : 06th February 2021 08:39 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வில்லூரைச் சோ்ந்த பால்சாமி மகன் பாண்டீஸ்வரன் (27), புண்ணியமூா்த்தி மகன் காப்புலியான் (32), முருகேசன் மகன் வெற்றிவேல் (33), சுப்பிரமணி மகன் திருப்பதி (32), ,அழகுமலை மகன் பாலகுரு (40) ஆகியோா் அப்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தனா்.
அவா்களை போலீஸாா் கைது செய்து ரூ. 750-ஐ பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...