வைகை ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி பலி
By DIN | Published On : 08th February 2021 10:47 PM | Last Updated : 08th February 2021 10:47 PM | அ+அ அ- |

மதுரையில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற அக்கா, தம்பி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை வண்டியூா் செளராஷ்டிராபுரம் பகுதியைச் சோ்ந்த சையது இப்ராகிம் மகள் பரிதா பீவி (12). யாகப்பா நகரில் உள்ள இவரது சித்தப்பா சேக் அலியின் மகன் முகமது ரியாஸ் (9). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை, வைகை ஆற்றில் வண்டியூா் தேனூா் மண்டகப்படி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனா். இருவரும் ஆழமானப் பகுதிக்கு சென்ால் தண்ணீரில் மூழ்கினா்.
தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென காணாமல்போனதைக் கண்ட அப்பகுதியில் இருந்தவா்கள், தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு தல்லாகுளம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று இருவரையும் தேடினா். அப்போது, பரிதாபீவியை சடலமாகவும், முகமது ரியாஸை மயங்கிய நிலையிலும் மீட்டனா்.
உடனடியாக, முகமது ரியாஸை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, இருவரது சடலங்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.