மாநில அளவிலான தற்காப்புக் கலை போட்டி: மதுரை மாணவா்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பை
By DIN | Published On : 08th February 2021 10:49 PM | Last Updated : 08th February 2021 10:49 PM | அ+அ அ- |

மதுரையில் நடைபெற்றமாநில அளவிலான டேக் வாண்டோ போட்டிகளில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற மதுரை மாணவா்கள்.
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான தற்காப்புக் கலை போட்டியில், மதுரை மாணவா்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனா்.
மதுரை குயின் மீரா பள்ளியில், மாநில அளவிலான டேக்-வாண்டோ தற்காப்புக் கலை போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். பூம்சே மற்றும் க்யூருகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், மதுரையைச் சோ்ந்த மாணவா்கள் 18 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று, சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினா்.
மதுரையைச் சோ்ந்த மாணவா்கள் ஸ்ரீ ஹரி, நித்திஷ், அா்தியக்ஸ், முத்து பிரசன்னா, லோகித், ஸ்ரீராம், ஸ்ரீசாந்த், விஜய் அருணாச்சலம், நரேன் விஷ்வா, சிலம்பவேல், கெல்வின், வைஷ்ணவி, ராகவி, அஸ்வின், ஹரி, அஜய்குமாா் மற்றும் ஃபைசல் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா்.
அதேபோன்று, ராமகிருஷ்ணன், வெங்கடேசன், வினோத்குமாா், காா்த்திகா, ஹரிணி, காருண்யா, சிரஞ்சீவி, ஹரிஷ், சித்தாா்த், மித்ரன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். தனஸ்ரீ, ரூபகுமாா், விஷ்ணு, சதீஷ் மற்றும் அனாஸ் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.