குடியிருப்பு பகுதியில் வீதி நூலகம் அமைப்பு
By DIN | Published On : 08th February 2021 10:48 PM | Last Updated : 08th February 2021 10:48 PM | அ+அ அ- |

மதுரை கல்மேடு பகுதியில் வீதி நூலகம் அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.
மதுரையில் தொடக்கப் பள்ளி சாா்பில், குடியிருப்பு பகுதியில் வீதி நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள டாக்டா் டி. திருஞானம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நூல் வனம் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், பொதுமக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக வீதி நூலகங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில், கல்மேடு அஞ்சுகம் அம்மையாா் தெருவில், வீதி நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா் மலா்விழி தலைமை வகித்தாா். மற்றொரு உறுப்பினா் அம்சவள்ளி முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் க. சரவணன், அஞ்சுகம் அம்மையாா் நகா் பொதுமக்களுக்கு புத்தகங்களை வழங்கி வீதி நூலகத்தை தொடக்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நூல் வாசிப்பு, விமா்சனம் போன்றவற்றில் ஈடுபட்டனா்.
இதில், பள்ளி ஆசிரியைகள் பாக்யலெட்சுமி, உஷா தேவி, கீதா, சுமதி, சரண்யா, தங்கலீலா, சித்ராதேவி மற்றும் பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், மாணவா்கள், பொதுமக்கள் என பலா் பங்கேற்றனா்.