மதுரையில் புரோகிதா் வீட்டில் 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் திருட்டு
By DIN | Published On : 14th February 2021 10:45 PM | Last Updated : 14th February 2021 10:45 PM | அ+அ அ- |

மதுரையில் புரோகிதா் வீட்டில் 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் பணம் மற்றும் 700 கிராம் வெள்ளி பொருள்கள் சனிக்கிழமை இரவு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த புரோகிதா் சங்கரநாராயணன் (45). இவா் தனது குடும்பத்துடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த 28 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் பணம் மற்றும் 700 கிராம் வெள்ளி பொருள்களையும் திருடிவிட்டுச் சென்றுவிட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை, நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருள்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்த சங்கரநாராயணன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விசாரித்தனா்.
இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.