கொட்டாம்பட்டி அருகே விபத்து: இருவா் பலி
By DIN | Published On : 14th February 2021 04:02 AM | Last Updated : 14th February 2021 04:02 AM | அ+அ அ- |

மேலூா்: கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு இளைஞா்கள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
சாலக்கிபட்டி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை (22), தினேஷ் (20) ஆகிய இருவரும் மேலூரிலிருந்து ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா். நான்கு வழிச்சாலையில் தாமரைப்பட்டி விலக்கில் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த மேலூா் போலீஸாா் சென்று இருவா் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைககாக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.