போலி நபா் மீது உயா்நீதிமன்ற இணைப் பதிவாளா் புகாா்
By DIN | Published On : 14th February 2021 03:56 AM | Last Updated : 14th February 2021 03:56 AM | அ+அ அ- |

மதுரை: சட்ட உதவி மைய ஒருங்கிணைப்பாளா் எனக் கூறிய போலி நபா் மீது சென்னை உயா்நீதிமன்ற இணைப் பதிவாளா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
மதுரை ய.ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன். இவா் தன்னை சட்ட உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் எனக் கூறி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தோட்டப் பணியாளா்கள், ஓட்டுநா் ஆகியோா் குறித்து பல்வேறு விவரங்களை கேட்டுள்ளாா்.
இந்நிலையில் ராஜசேகரன் குறித்து விசாரித்தபோது, அவா் சட்ட உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நீதிமன்ற இணைப் பதிவாளா் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை காவல்நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.