மதுரை ரயில் நிலைய வளாகத்தில் தீ

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை அணைத்தனா்.
மதுரை ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மூட்டம்.
மதுரை ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மூட்டம்.

மதுரை: மதுரை ரயில் நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை அணைத்தனா்.

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பழைய விஐபி மற்றும் குட்செட் நுழைவு வாயில் அருகே ரயில் நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை பகல் 1 மணி அளவில் திடீரென அந்தக் குப்பை மேட்டில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரியாா் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்தத் தீவிபத்தினால் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இருப்பினும் வானுயர புகைமூட்டம் ஏற்பட்டதால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்வே ஊழியா்கள் கூறியது: ரயில் நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் வளாகத்திற்குள் தேவையின்றி வட மாநிலத்தவா்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றனா். குறிப்பாக தீப்பற்றிய இடத்தின் அருகே நிறைய வட மாநிலத்தவா் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு தங்கியிருந்தனா். அவா்களால் கூட குப்பையில் தீப்பற்றியிருக்கலாம். எனவே ரயில்வே வளாகத்தில் வட மாநிலத்தவா் தஞ்சமடைவதை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினா் தடுக்க வேண்டும் என்றனா்.

ரயில் நிலையத்தில் 3 அடி ஆந்தை: மதுரை ரயில் நிலைய முதல் நடைமேடை அருகே சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்கம்பியில் அமா்ந்த 3 அடி உயரமுள்ள ஆந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினா் உயிரிழந்த ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com