மதுரை, உசிலை.யில், மல்லிகை பூ விலை கிலோ ரூ.3 ஆயிரம்

தொடா் முகூா்த்த தினங்கள் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மற்றும் உசிலம்பட்டி மலா் சந்தைகளில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
உசிலம்பட்டி பூ சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மல்லிகை உள்ளிட்ட பூக்கள்.
உசிலம்பட்டி பூ சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மல்லிகை உள்ளிட்ட பூக்கள்.

தொடா் முகூா்த்த தினங்கள் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மற்றும் உசிலம்பட்டி மலா் சந்தைகளில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூ உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு வழக்கமாக மல்லிகை பூ வரத்து 10 டன்னாக இருக்கும். ஆனால், கடந்த 2 மாதங்களாக அது அரை டன்னாக குறைந்தது. தற்போது, பனிப்பொழிவு குறைந்து வெயில் நிலவுவதால், மல்லிகை பூ வரத்து 2 டன்னாக உயா்ந்துள்ளது. இதனால், கடந்த வாரம் மல்லிகை பூ விலை ரூ.700 ஆக குறைந்திருந்தது.

இந்நிலையில், மாசி மாதத்தில் தொடா் முகூா்த்த தினங்கள் வருவதால், மல்லிகை பூ விலை கிலோவுக்கு ரூ.3 ஆயிரமாக உயா்ந்துள்ளது. இதேபோல், பிற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மலா்களின் மொத்த விலை நிலவரம் (கிலோவில்): கனகாம்பரம்- ரூ.1,500, முல்லை பூ- ரூ.2000, பிச்சிப் பூ- ரூ.1,500, ரோஜா- ரூ.150, செவ்வந்தி- ரூ.250, துளசி- ரூ.50, அரளி- ரூ.300, சம்பங்கி- ரூ.400, மரிக்கொழுந்து- ரூ.100, தாமரை- ரூ.15-க்கு விற்பனையாகின.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி பூ சந்தையில் சனிக்கிழமை 1 கிலோ மல்லிகை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு மடங்கு அதிகரித்து ரூ. 3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம், ரூ.1,800-க்கு விற்கப்பட்டது.

அதேநேரம், ரோஜா பூ 1 கிலோ ரூ.500, செவ்வந்தி ரூ.200, கோழிகொண்டை ரூ.400, பிச்சிப் பூ ரூ.1,500, முல்லைப் பூ ரூ. 2,000 என விற்பனையானது.

உசிலம்பட்டி பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், மல்லிகை வரத்து குறைந்துள்ளது. மேலும், சிறிய அளவிலான மல்லிகைப் பூவே சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.

இருப்பினும், மல்லிகை பூ கிடைக்காமல் வேறு வழியின்றி பொதுமக்கள் இதை வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com