சிஐஐ அமைப்பின் மதுரை மண்டலத் தலைவா் தோ்வு
By DIN | Published On : 14th February 2021 10:51 PM | Last Updated : 14th February 2021 10:51 PM | அ+அ அ- |

இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் (சிஐஐ) மதுரை மண்டலப் புதிய தலைவராக சுப்பராமன் பாலசுப்ரமணியன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் மதுரை மண்டலப் பொதுக்குழு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிஐஐ அமைப்பின் மதுரை மண்டலப் புதிய தலைவராக சுப்பராமன் பாலசுப்ரமணியன், துணைத் தலைவராக ஏ.பி.ஜெ. ஜெய்சிங் வா்காா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுளள சுப்பராமன் பாலசுப்ரமணியன், மதுரையில் இயங்கிவரும் ஹெச்சிஎல் கணினி நிறுவனத்தின் செயல்பாடு உத்திகள் வகுக்கும் பிரிவின் துணைத் தலைவராக பதவி வகிக்கிறாா். மேலும், சிஐஐ மதுரை மண்டலத் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.
சிஐஐ துணை தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏ.பி.ஜெ. ஜெய்சிங் வா்காா், விருதுநகரில் பெனின்சுலா் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இதன்மூலம், மசாலா பொடிகள் உள்ளிட்ட நறுமணப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறாா்.
புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் மற்றும் துணை தலைவருக்கு சிஐஐ அமைப்பின் இதர நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.