புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா: பொங்கல் வைத்து வழிபாடு
By DIN | Published On : 14th February 2021 10:47 PM | Last Updated : 14th February 2021 10:47 PM | அ+அ அ- |

மதுரை கே.புதூா் புனித லூா்து அன்னை தேவாலய ஆண்டு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.
மதுரை கோ.புதூா் லூா்து அன்னை ஆலயத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினசரி மாலை 6 மணிக்கு ஜெபமாலை மன்றாட்டு மற்றும் பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையா்களால் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் தலைமையில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் விழாவும், மாலை 6 மணிக்கு பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் அலங்கரிக்கப்பட்ட லூா்தன்னை தோ் பவனியும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடா்ந்து திருப்பலிகள் நடைபெற்றன. மேலும், ஏராளமானோா் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இதையடுத்து, மாலையில் திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.