காா் ஓட்டுநா் தற்கொலையில் மா்மம்: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 14th February 2021 03:58 AM | Last Updated : 14th February 2021 03:58 AM | அ+அ அ- |

ஓட்டுநா் சூா்யபிரகாஷின் தற்கொலையை போலீஸாா் உரிய விசாரணை நடத்தக் கோரி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
மதுரை: மதுரையில் காா் ஓட்டுநா் தற்கொலையில் மா்மம் உள்ளதாகக் கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுரை கரும்பாலை இந்திரா நகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் சூா்யபிரகாஷ் (30). இவா் வட்டாட்சியா் ஒருவருக்கு தற்காலிக காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனா். கூடல்புதூரில் உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்கு சூரியபிரகாஷ் அடிக்கடி சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில், அந்த பெண் வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அவா் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல் புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சூா்யபிரகாஷின் இறப்பில் மா்மம் உள்ளதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தற்கொலை தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து சூா்யபிராகஷின் உடலை உறவினா்கள் வாங்கி சென்றனா்.