சோலைமலை முருகன் கோயிலில் தங்கத்தேரோட்டம்
By DIN | Published On : 18th February 2021 07:33 AM | Last Updated : 18th February 2021 07:33 AM | அ+அ அ- |

சோலைமலை முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தங்கத்தேரோட்டம்.
மதுரை அருகேயுள்ள அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தங்கத்தேரோட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக சோலைமலை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் மற்றும் தங்கத்தேரோட்டம் கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு அறிவித்துள்ள தளா்வுகளைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை இக்கோயிலில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் வள்ளி, தெய்வானை சமேதரராக சுப்பிரமணியா் தங்கத்தேரில் எழுந்தருளினாா். கள்ளழகா் கோயில் தக்காா் வெங்கடாசலம், முருக பக்தா்கள் சாா்பில் சுப்பையா செட்டியாா் உள்ளிட்ட ஏராளமானோா் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வியாழக்கிழமை முதல் தங்கத்தேரோட்டத்துக்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி பக்தா்கள், தேரை வடம்பிடித்து இழுக்கலாம் என கள்ளழகா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.