மாநில அளவிலான முதல்வா் கோப்பை இறகுப்பந்து போட்டி: பிப்.20-இல் தொடக்கம்
By DIN | Published On : 18th February 2021 11:20 PM | Last Updated : 18th February 2021 11:20 PM | அ+அ அ- |

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப் பந்துப்போட்டி மதுரையில் பிப்ரவரி 20-இல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ந.லெனின் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக முதல்வா் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையத்தின் மதுரைப் பிரிவின் சாா்பாக முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 20 முதல் 22-ஆம் தேதி வரை எம்ஜிஆா் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா பிப்ரவரி 20-இல் நடைபெற உள்ளது. இறகுப்பந்து போட்டியில் 37 மாவட்டங்களில், மாவட்ட அளவிலான போட்டிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகள் மற்றும் அணி மேலாளா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளைாயாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு தலா ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது என்றாா்.