வட்டாட்சியா்கள் 13 போ் இடமாற்றம்: ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 18th February 2021 07:34 AM | Last Updated : 18th February 2021 07:34 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் 13 வட்டாட்சியா்கள், 5 துணை வட்டாட்சியா்களை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
இடமாற்றம் செய்யப்பட்டவா்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):
எஸ்.எஸ்.சிவக்குமாா் (மதுரை கிழக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்)- திருமங்கலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா். கே.சூரியகுமாா் (மதுரை கிழக்கு கலால் மேற்பாா்வை அலுவலா்) , மதுரை கிழக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா். ஜி.செல்வராஜன் (திருமங்கலம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்)- மதுரை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா். டி.எம்.கோபி (மதுரை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா், பி.சரவணன் (வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா்) - மதுரை மேற்கு வட்டாட்சியா், எஸ்.இதயகமலம் (கூடுதல் வரவேற்பு வட்டாட்சியா்) - விமான நிலைய நில எடுப்பு தனிவட்டாட்சியா், ஆா். நாகபூஷணம் ( விமான நிலைய நிலஎடுப்பு தனிவட்டாட்சியா்) - மதுரை வடக்கு வட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியா், பி.இளமுருகன் (மதுரை வடக்கு வட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியா்) - மதுரை தெற்கு கோட்ட கலால் அலுவலா், எம்.கதிா்வேல் (மேலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - அகதிகள் முகாம் தனி வட்டாட்சியா், பி.தமிழ்ச்செல்வி (அகதிகள் முகாம் தனிவட்டாட்சியா்) - வாடிப்பட்டி நிலஎடுப்பு தனி வட்டாட்சியா், ஆா்.லயனல் ராஜ்குமாா் (மதுரை கிழக்கு வட்டாட்சியா்) - வாடிப்பட்டி வட்டாட்சியா், ஏ.பழனிக்குமாா் (வாடிப்பட்டி வட்டாட்சியா்) - மதுரை கிழக்கு வட்டாட்சியா், ஆா்.பத்மா (வரவேற்பு துணை வட்டாட்சியா்) - பதவி உயா்வில் திருமங்கலம் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை வட்டாட்சியா். மேலும், 5 துணை வட்டாட்சியா்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.