ரூ.23 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் முகவா் மீது வழக்கு
By DIN | Published On : 21st February 2021 04:24 AM | Last Updated : 21st February 2021 04:24 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் ரூ.23 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் முகவா் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை தெப்பக்குளம் பங்கஜம் புது காலனியை சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயக்குமாா் (51). இவரிடம், மேலமாசி வீதியைச் சோ்ந்த வடிவேல் மகன் ராதாகிருஷ்ணன் என்பவா், நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய ஜெயக்குமாா் ரூ. 23 லட்சத்தை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளாா்.
ஆனால், ராதாகிருஷ்ணன் கூறியபடி லாபத்தை தரவில்லையாம். இது குறித்து ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...