உசிலம்பட்டியில் போக்குவரத்து சங்கத்தினா் இரண்டாம் நாள் வேலை நிறுத்தம்.
By DIN | Published On : 26th February 2021 11:40 PM | Last Updated : 26th February 2021 11:40 PM | அ+அ அ- |

உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. உசிலம்பட்டியில் இருந்து 102 பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதில் 14 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளை முன்பாக தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலா் எம்.சி. பாண்டி, சிஐடியு செயலா் ஆசைத்தம்பி, டியூசி சி தலைவா் குணசேகரன், ஏஐடியூசி தலைவா் ராஜா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...