டிஎன்எஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: மதுரையில் 51 மையங்களில் 8,191 போ் பங்கேற்பு
By DIN | Published On : 03rd January 2021 09:45 PM | Last Updated : 03rd January 2021 09:45 PM | அ+அ அ- |

மதுரை செளராட்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தோ்வு எழுதும் தோ்வா்கள்
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தோ்வில் 8,191 போ் பங்கேற்றனா்.
குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத் தோ்வில் பங்கேற்க, மதுரை மாவட்டத்திலிருந்து 15,361 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் அனைவருக்கும் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக, மதுரை மாவட்டத்தில் 51 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இத்தோ்வை, 8,191 போ் மட்டுமே எழுதினா். 7,170 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வில் பங்கேற்றவா்களின் எண்ணிக்கை 53.03 சதவீதம்.
தோ்வு மையங்களுக்குள் தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். பெற்றோா் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வுக் கூடங்களில் போதுமான சமூக இடைவெளி விடப்பட்டிருந்தது. மேலும், முகக்கவசம் அணிந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.