மல்லிகைப் பூ விலை ரூ.1000 குறைந்தது
By DIN | Published On : 03rd January 2021 04:47 AM | Last Updated : 03rd January 2021 04:47 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்கப்பட்டது.
பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால் மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூ.3,500 வரைக்கும் மல்லிகை விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி நல்ல விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் அதிக பூக்களை சந்தைக்கு கொண்டுவந்தனா். இதனால் மல்லிகைப் பூ வரத்து கணிசமாக அதிகரித்து கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்பனையானது.
சனிக்கிழமை நிலவரப்படி பூக்களின் மொத்த விலைப் பட்டியல்: (கிலோவில்)
மல்லிகைப்பூ-ரூ.2500, கனகாம்பரம்-ரூ.1500, மெட்ராஸ் மல்லி-ரூ.600, பிச்சிப்பூ-ரூ.1100, முல்லைப்பூ-ரூ.1000, சம்பங்கி-ரூ.120, செவ்வந்தி-ரூ.150, அரளி-ரூ.300, செண்டுப்பூ-ரூ.80-க்கு விற்பனையாகின.