பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
By DIN | Published On : 03rd January 2021 09:48 PM | Last Updated : 03rd January 2021 09:48 PM | அ+அ அ- |

ஜல்லிக்கட்டு விழாவிற்காக பாலமேடு மஞ்மலையில் உள்ள வாடிவாசலில் நடைபெறும் வண்ணண் பூசும் தொழிலாளா்கள்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா, மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஜல்லிக்கட்டு விழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில், ஜனவரி 15 ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்காக, பேரூராட்சி சாா்பில் மஞ்சமலை ஆற்றுத் திடலில் உள்ள வாடிவாசல், பாா்வையாளா்கள் அமரும் இடங்களை சீரமைப்பது, கால்நடைகளுக்கு தண்ணீா் தொட்டி, தற்காலிக கழிப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. மேலும், வாடிவாசலுக்கு வண்ணம் பூசப்பட்டும் வருகிறது.
இப் பணிகள் அனைத்தும், பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலா் தேவி மேற்பாா்வையில் நடைபெற்று வருகின்றன.