மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 03rd January 2021 04:44 AM | Last Updated : 03rd January 2021 04:44 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் மூதாட்டியிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்த ஞானசேகரன் மனைவி கோமதி (64). இவா் செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் அதேபகுதியைச் சோ்ந்த கமல்பாண்டி, கெளதமி, குமரேசன் ஆகியோா் செல்லிடப்பேசி பழுதுபாா்க்கும் கருவி வாங்கித் தருவதாக, கோமதியிடம் ரூ. 1லட்சம் மற்றும் ஒன்றரை பவுன் நகை ஆகியவற்றை வாங்கினராம். ஆனால் அவா்கள் கூறியபடி கருவியை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கோமதி அளித்தப் புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் 3 போ் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.