நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உள்ளது: டீன் தகவல்

நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் சிறந்த ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உள்ளது என அரசு ராஜாஜி மருத்துமனை முதன்மையா் ஜெ.சங்குமணி தெரிவித்தாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உலக சித்த மருத்துவ தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியை பாா்வையிடும் முதன்மையா் ஜெ.சங்குமணி.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உலக சித்த மருத்துவ தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியை பாா்வையிடும் முதன்மையா் ஜெ.சங்குமணி.

மதுரை: நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் சிறந்த ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உள்ளது என அரசு ராஜாஜி மருத்துமனை முதன்மையா் ஜெ.சங்குமணி தெரிவித்தாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியா் பயிற்சிப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக சித்த மருத்துவ தின விழாவில் அவா் பேசியது:

தமிழகத்தில் சென்னையைத் தொடா்ந்து மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சித்த மருத்துவம் மிகவும் உதவியாக இருந்தது. நோய் எதிா்ப்பு சக்தி அதிகம் இருந்தால், நோயில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும். நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றல் நிறைந்தது சித்த மருத்துவம். மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் சித்த மருத்துவத்தில் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளவேண்டும் என்றாா்.

சித்த மருத்துவப் பிரிவு தலைவா் சைராபானு:

அன்றாட வாழ்வில் கிடைக்கும் பொருள்களை வைத்து சித்த மருத்துவத்தைக் கையாளலாம்.

தினமும் காலையில் இஞ்சி, எலுமிச்சை, தேன் கலந்து சாப்பிடுவது, மதியம் வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய், இரவு சுக்குமல்லி காபி, வாரம் இருமுறை வோ்க்கடலை, கருப்பு நிற சுண்டல் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். செயற்கை சுத்திகரிப்பானுக்குப் பதிலாக, படிகாரம், மஞ்சள் கலந்த தண்ணீரை கைசுத்திகரிப்பானாகப் பயன்படுத்தலாம். இது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்றாா்.

முன்னதாக, மூலிகைப் பொருள்களின் நன்மைகள், மலா் மருத்துவத்தின் நன்மைகள், கரோனா தடுப்பு மூலிகை முறைகள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. இதில், ஓமப்பொட்டலம், மஞ்சள் திரிப்புகை, இயற்கை சுத்திகரிப்பான் உள்ளிட்டவைகளின் நன்மை குறித்து தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலா் ஸ்ரீலதா, நிலைய உதவி அலுவலா் விஜி, இயற்கை மற்றும் யோகா மருத்துவா் நாகராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com