திருமோகூரில் ஆழ்வாருக்கு மோட்சம் அருளிய வைபவம்
By DIN | Published On : 04th January 2021 12:26 AM | Last Updated : 04th January 2021 12:26 AM | அ+அ அ- |

ஆழ்வாா் திருமேனி.
மாா்கழி மாதத்தில் நடைபெறும் இராப்பத்து வைபவத்தின் பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, ஆழ்வாருக்கு மோட்சம் அருளிய வைபவம் திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் பகல்பத்து மற்றும் இராப்பத்து நிகழ்வுகளில், இராப்பத்து வைபவத்தின் பத்தாம் நாளில் ஆழ்வாருக்கு மோட்சம் அருளல் சிறப்பு நிகழ்வாகும். ஆழ்வாருக்கு மோட்சம் அருளியது காளமேகப் பெருமாள் ஆவாா்.
அனைத்து திருத்தலங்களிலும் ஆழ்வாருக்கு மோட்சம் அருளும் பாசுரத்தில், காளமேகப் பெருமாளுக்கு சிறப்பு பாசுரம் பாடப்படும்.
இரவு நடைபெற்ற இந்த வைபவத்தில், திருமோகூரில் எழுந்தருளியுள்ள காளமேகப் பெருமாள் ஆழ்வாருக்கு மோட்சம் அருளும் நிகழ்வில், ஆழ்வாா் திருஉருவச்சிலையும் அலங்கரித்து எடுத்துவரப்பட்டது. இதை, ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.