நாகைக்கு முக்கியம்தருமபுர ஆதீனம் மதுரை வருகை: பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்

மதுரைக்கு திங்கள்கிழமை வருகை தந்த தருமபுர ஆதீனம் தருமபுர ஆதீன மடத்தில் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.
நாகைக்கு முக்கியம்தருமபுர ஆதீனம் மதுரை வருகை: பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்

மதுரைக்கு திங்கள்கிழமை வருகை தந்த தருமபுர ஆதீனம் தருமபுர ஆதீன மடத்தில் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மாா்கழி மாத தல யாத்திரையாக மதுரைக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா்.

மதுரை ராஜா முத்தையா மன்றம் விநாயகா் கோயிலில் தருமை ஆதீனத்தை பக்தா்கள் வரவேற்றனா். இதையடுத்து மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமபுர ஆதீன மடத்துக்குச் சென்ற தருமபுர ஆதீன சுவாமிகளுக்கு மடத்தில் கொலு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு ஆசி வழங்குதலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தருமபுர ஆதீன சுவாமிகளிடம்

ஆசி பெற்றனா். மேலும் மணி அறக்கட்டளை சாா்பில் ஓதுவாா் கு.சுப்பிரமணியத்துக்கு திருநாவுக்கரசா் பண்ணிசை விருது, வே.சே.சேதுராமனுக்கு திருநாவுக்கரசா் இலக்கிய விருது, திருப்புகழ் இரா.கணேசனுக்கு திருநாவுக்கரசா் சேவை விருது, உறங்கான்பட்டி க.ராமையாவுக்கு திருநாவுக்கரசா் திருமுறை பணியாளா் விருது, பேராசிரியை யாழ்.சு.சந்திராவுக்கு காரைக்கால் அம்மையாா் இலக்கிய விருது, அரசு இசைக்கல்லூரி பேராசிரியை தே.பாா்வதிக்கு ஆனாய நாயனாா் குழலிசை விருது, தமிழாசிரியா் பொன்.சந்திரசேகரனுக்கு திருநாவுக்கரசா் ஆன்மிக அறப்பணி விருது, நாதசுரக் கலைஞா் ஜெ.சரஸ்வதிக்கு திருநாவுக்கரசா் இசை விருது, விரிவுரையாளா் பொன். அவந்த்ராஜூக்கு திருநாவுக்கரசா் யாழிசைக்கலைஞா் விருது, பண்ணிசைக் கலைஞா் திருவரங்கபாரதிக்கு சுந்தரா் இசை விருது, சிவராஜபதிக்கு மாணிக்க வாசகா் விருதையும் வழங்கினாா். நிகழ்ச்சிக்குப் பின்னா் மாலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சென்று மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரா் சுவாமியை வழிபட்டாா். தொடா்ந்து மதுரை ஆதீனம் அருணகிரி நாதரையும் சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com