வாடிப்பட்டியில் 1.13 லட்சம் தேங்காய்கள் ஏலம்

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 987 தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
Updated on
1 min read

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 987 தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

மதுரை விற்பனை குழுவிற்கு உள்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 36 விவசாயிகள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 987 தேங்காய்களை 49 குவியலாக ஏலத்திற்கு வைத்தனா். ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனா். அதிகபட்சமாக ரூ.12.56-க்கும் குறைந்தபட்சமாக ரூ.8.21-க்கும் தேங்காய்கள் ஏலமிடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ.10.18 லட்சத்திற்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. மேலும் 4 விவசாயிகளின், 344.45 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ரூ.90-க்கு ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com