பேரையூரில் நல்ல மழை
By DIN | Published On : 09th July 2021 08:56 AM | Last Updated : 09th July 2021 08:56 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா சுற்றுவட்டார பகுதியில் வியாழகிழமை நல்ல மழை பெய்தது.
பேரையூா் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளான பேரையூா்,டி.கல்லுப்பட்டி,சேடப்பட்டி,சாப்டூா்,சந்தையூா்,சிலைமலைபட்டி,சுப்புலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீா்த்தது.இந்த மழை காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.