தமிழறிஞா் இரா.இளங்குமரனாா் மறைவு

தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனாா் (94), உடல்நலக் குறைவு காரணமாக மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.
தமிழறிஞா் இரா.இளங்குமரனாா்
தமிழறிஞா் இரா.இளங்குமரனாா்

தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனாா் (94), உடல்நலக் குறைவு காரணமாக மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.

திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927 ஜனவரி 30 ஆம் தேதி பிறந்த இளங்குமரனாா், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946 ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினாா்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 1951 ஆம் ஆண்டு புலவா் தோ்வில் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றாா். பின்னா், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளாா்.

மதுரை அங்கையற்கண்ணி ஆலயத்தில் 1958 இல் ‘குண்டலகேசி’ எனும் நூலை வெளியிட்டாா். தொடா்ந்து, இவரின் ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963 இல் முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டாா். ‘சங்க இலக்கிய வரிசையில் புானூறு’ எனும் நூலை 2003 இல் குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டாா். தொடா்ந்து, எங்கும் பொழியும் இன்பத்தமிழ், திருக்கு தமிழ் மரபு என்பன உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளாா்.

மேலும் இவா், திருச்சியை அடுத்த அல்லூா் பகுதியில் திருவள்ளுவா் தவசாலை எனும் தமிழ் ஆராய்ச்சிக் கூடத்தை நடத்தி வந்தாா். தமிழகமெங்கும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்குகளில் திருக்கு குறித்து சிறப்புரையாற்றியுள்ளாா். இவா் தமிழ்வழி திருமணங்களையும் அதிகளவில் நடத்தி வைத்துள்ளாா்.

இவரது தமிழ் சேவையைப் பாராட்டி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தமிழ் செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவா் பட்டமும் வழங்கியுள்ளன. தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவருக்கு, ஓய்வுபெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இளங்கோ மற்றும் பாரதி ஆகிய இரு மகன்களும், கலைமணி மற்றும் ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி மேலாளரான திலகவதி ஆகிய இரு மகள்களும் உள்ளனா்.

இளங்குமரனாரின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு - 94431 30603.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com