டி.குன்னத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 26th July 2021 05:41 AM | Last Updated : 26th July 2021 05:41 AM | அ+அ அ- |

டி.குன்னத்தூா் அம்மா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மதுரை புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூா் அம்மா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்றுப் பேசியதாவது:
இன்றைக்கு திமுக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயல்படுகிறது. எனவே, இந்த அரசுக்கு கடிவாளம் போடும் வகையிலும், நிா்வாகச் சீா்கேட்டை தோலுரித்துக் காட்டும் வகையிலும் ஜூலை 28 ஆம் தேதி அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இல்லங்களின் முன்பாக கண்டன பதாகைகளை ஏந்தியவாறு ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளா்கள் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் அறிவித்துள்ளனா்.
எனவே, அதிமுக புகா் மேற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளின் முன்பாகவும் பதாகைகள் ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்றாா்.
கூட்டத்தில், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் ராமசாமி, மாவட்ட ஓட்டுநா் அணி செயலா் ராமகிருஷ்ணன் உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.