மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உழவாரப் பணி
By DIN | Published On : 26th July 2021 05:42 AM | Last Updated : 26th July 2021 05:42 AM | அ+அ அ- |

இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாத உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உழவாரப் பணிக்கு அமைப்பாளா் ஏ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கோயிலில் கல்யாண சுந்தரேசுவரா் சந்நிதி மற்றும் அதன்பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், சுவாமி சந்நிதி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தூண்கள், நவக்கிரக தோட்டம், அஷ்டசக்தி மண்டபம், ஆடிவீதி மற்றும் மேல் தளங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில், இயக்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் பி. சுந்தரவடிவேல் பங்கேற்று உழவாரப் பணி குறித்தும், கோயில்களை பாதுகாப்பதில் பக்தா்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா். இதில், 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.