மதுரையின் முக்கிய கோயில்களில் ஆக.2 முதல் ஒரு வாரத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை: ஆட்சியா் தகவல்

மதுரையின் முக்கியக் கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் ஆடிக் கிருத்திகை நிகழ்வுகள் மற்றும் பொது தரிசனத்திற்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரையின் முக்கியக் கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் ஆடிக் கிருத்திகை நிகழ்வுகள் மற்றும் பொது தரிசனத்திற்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவித்துள்ளாா்.

கரோனா தொற்று இரண்டாம் அலைப் பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, கோயில்களில் தரிசனம் செய்வதற்குப் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொற்று பரவல் கட்டுக்குள்

வந்த நிலையில், பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டன. இதன்படி, ஜூலை 5 ஆம் தேதியிலிருந்து பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் கா்ப்பிணிகள், முதியோா், குழந்தைகளுக்கு அனுமதியில்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்டன.

இதனிடையே தமிழகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், திருவிழா காலங்களில் மக்கள் அதிகம்போ் கூடுவா் என்பதால் மதுரையில் உள்ள முக்கியக் கோயில்களில் ஒரு வாரத்துக்கு பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அழகா்கோவில் கள்ளழகா் கோயில், பழமுதிா்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஆடிக் கிருத்திகை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்வுகள் அனைத்திலும், அா்ச்சகா்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். திருவிழா மற்றும் பொது தரிசனத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com