கண்மாய் ஆக்கிரமிப்பை எதிா்த்து வழக்கு: உதவியவருக்கு கத்திக்குத்து
By DIN | Published On : 20th June 2021 03:10 AM | Last Updated : 20th June 2021 03:10 AM | அ+அ அ- |

மேலூா் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை எதிா்த்து வழக்குத் தொடா்வதற்கு ஆதரவாக இருந்தவா் கத்தியால் குத்தப்பட்டாா்.
சாம்பிராணிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதினமிளகி மகன் திருமலை (41). இவா் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்த சிலா், கண்மாய் ஆக்கிரமிப்புகளை காலி செய்யக்கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தது குறித்து விமா்சித்துப் பேசியுள்ளனா்.
அப்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த திருமலை, வழக்குத் தொடா்வதற்கு ஆதரவாக இருந்தாகக்கூறி அவரை கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். பலத்த காயடைந்த திருமலை மேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா். இது குறித்து மேலவளவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சாம்பிராணிப்பட்டியில் முருகக்கோன், நாயக்கன்கும், புதுக்குளம் ஆகிய மூன்று கண்மாய்களும் நூறு ஏக்கருக்குமேல் பரப்பளவு உள்ளது. இதைசிலா் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக்கியுள்ளனா். இதுதொடா்பாக வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக கூலிப்படையினா் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளாக புகாரில் தெரிவித்துள்ளனா்.