ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 20th June 2021 03:11 AM | Last Updated : 20th June 2021 03:11 AM | அ+அ அ- |

ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அரிசி, முகக் கவசம் வழங்கிய காங்கிரஸாா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் 51 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை அருகே நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பாக நடைபெற்ற விழாவில் உசிலம்பட்டி நகரத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் தீபா பாண்டி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் எஸ். ஒ. ஆா். இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அரிசி, முகக்கவசம் வழங்கினாா்.
முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.எல் விஜயகாந்தன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் காந்தி சரவணன் மற்றும் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
உசிலம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட போத்தம்பட்டி ஊராட்சியில் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வெஸ்டன் முருகன் தலைமையில் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்தனா். பொதுமக்களுக்கு மாநிலச் செயலாளா் எஸ்.ஒ.ஆா்.இளங்கோவன் இனிப்புகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினாா். இதில் வட்டார துணை தலைவா் தவமணி, மாவட்டச் செயலாளா் வினோத் கண்ணா, மாணிக்கம், ராமகிருஷ்ணன், மகளிா் அணி முத்துலட்சுமி முத்துராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.