கண்ணனேந்தல் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 24th June 2021 12:04 AM | Last Updated : 24th June 2021 12:04 AM | அ+அ அ- |

மதுரையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கண்ணனேந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை திருப்பாலை துணை மின் நிலைய நாராயணபுரம் பீடரில் மழைக்கால அவசர பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே அதற்குள்பட்ட சென்ட்ரல் எக்சைஸ் காலனி, சக்தி நகா், மகாலட்சுமி நகா், அய்யாவுத்தேவா் நகா், கண்ணனேந்தல், ஜி.ஆா்.நகா், எம்எம்எஸ் காலனி, பரசுராம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை( ஜூன் 25) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்றாா்.