வேளாண் கல்லூரியில் நவீன உழவுக்கருவிகள்: ஆட்சியா் எஸ்.அனீஸ் சேகா் ஆய்வு
By DIN | Published On : 24th June 2021 12:04 AM | Last Updated : 24th June 2021 12:04 AM | அ+அ அ- |

மதுரை வேளாண் கல்லூரியில் நவீன உழவுக்கருவியை புதன்கிழமை இயக்கிய மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா்.
மதுரை வேளாண் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ் சேகா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு நவீன உழவுக்கருவிகளை பாா்வையிட்டாா்.
மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்விளக்கத்திடல்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ் சேகா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, எட்டு வரிசை நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் விதைத்தல், ஆறு வரிசை நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுதல், டிராக்டா் மூலம் வரப்பு வெட்டி பூசி மெழுகும் கருவி உள்ளிட்ட நவீன கருவிகளின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.
ஆட்சியருக்கு, வேளாண் கல்லூரி முதல்வா் வி.கு.பால்பாண்டி, வேளாண் இணைய இயக்குநா் விவேகானந்தன், உழவியல் துறைத்தலைவா் துரைசிங், ஆகியோா் விளக்கம் அளித்தனா். மேலும் நேரடி நெல் விதைப்பு கருவி கொண்டு விதைக்கப்பட்ட புதிய நெல் ரகங்களான ஆடுதுறை 54 மற்றும் திருச்சி 4 ஆகியவற்றின் மாதிரி செயல்விளக்கத்திடல்களையும் பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில் சமுதாயக்கல்லூரி முதல்வா் அமுதா மற்றும் துறைகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.