மேலவளவு முருகேசன் நினைவு தினம்: அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவு
By DIN | Published On : 29th June 2021 08:37 AM | Last Updated : 29th June 2021 08:37 AM | அ+அ அ- |

மேலவளவு முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகேசன் நினைவு தினத்தையொட்டி, மேலூா் மற்றும் மேலவளவு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளை புதன்கிழமை (ஜூன் 30) மூட, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.
மேலவளவு காவல் நிலையத்துக்கு உள்பட்ட அ.வெள்ளாளபட்டி, சாணிப்பட்டி, கிடாரிப்பட்டி மற்றும் மேலூா் காவல் நிலையத்துக்குள்பட்ட மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வெள்ளநாதன்பட்டி, தும்பைபட்டி, சிவகங்கை சாலை, மேலூா் சேனல் சாலை, பேருந்து நிலையம், அரிட்டாபட்டி, சொக்கம்பட்டி சாலை ஆகிய இடங்களில் செயல்படக் கூடிய அரசு மதுபானக் கடைகள் ஜூன் 30 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.