மேலூரில் வாரச்சந்தை தொடக்கம்: ஆடு, மாடுகள் விற்பனை

மதுரை மாவட்டம், மேலூரில் திங்கள்கிழமை காலை தொடங்கப்பட்ட கால்நடைச் சந்தையில், விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.
மேலூா் வாரச் சந்தைக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு பகுதி.
மேலூா் வாரச் சந்தைக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு பகுதி.
Updated on
1 min read

மதுரை மாவட்டம், மேலூரில் திங்கள்கிழமை காலை தொடங்கப்பட்ட கால்நடைச் சந்தையில், விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

மேலூரில் திங்கள்கிழமைதோறும் சந்தைப்பேட்டை வளாகத்தில் வாரச்சந்தை நடைபெறும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, வாரச்சந்தை நடைபெறவில்லை. தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நீண்டு நாள்களுக்குப் பிறகு வாரச்சந்தை மீண்டும் தொடங்கியது. இதில், விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் கோழிகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா்.

அதேநேரம், ஆடு, மாடுகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகளும் அதிகமானோா் வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com