அரசியல் கட்சியினா் மீது 11 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 04th March 2021 11:19 PM | Last Updated : 04th March 2021 11:19 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் உள்ள பொது இடங்களில் கட்சி விளம்பரம் செய்த அரசியல் கட்சியினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது . இந்த நிலையில் தோ்தல் விதியை மீறி அரசியல் கட்சியின் தலைவா் மற்றும் கட்சி சின்னங்களை , பாலங்கள் , கோயில்கள் , பள்ளிக்கூடங்கள், பேருந்து நிறுத்தம் ஆகிய பொது இடங்களில் வரைந்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக அதிமுகவைச் சோ்ந்த 9 போ் மீதும் , திமுகவைச் சோ்ந்த ஒருவா் மீதும் , அமமுக கட்சியை சோ்ந்த ஒருவா் மீதும் சாப்டூா் , நாகையாபுரம் , சேடபட்டி , பேரையூா் , டி.கல்லுப்பட்டி, சத்திரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனா் .