உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோயில் திருவிழா தொடா்பாக பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 04th March 2021 11:21 PM | Last Updated : 04th March 2021 11:21 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசித்திருவிழா நடத்துவது குறித்து இருதரப்பினரிடையே சமரச பேச்சு வாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். சில ஆண்டுகளாக சுவாமி கும்பிடும் இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமையில் நிகழாண்டில் திருவிழா நடத்துவது தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்தவா்களிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், இருதரப்பு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், வரும் சனிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.